சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் எப்படியோ! அப்படித்தான் இப்ப பாஜக உள்ளது!!

தற்போது ஆளும் கட்சியாக உள்ளது பாரதிய ஜனதா கட்சி. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியை பற்றி அவ்வப்போது பல எதிர்க்கட்சிகள் கருத்து கூறும். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேட்டியளித்துள்ளார். பிரசாந்த் கிஷோர்

அதன்படி இந்திய அரசியலில் இன்னும் பல தசாப்தங்களுக்கு பாஜக வல்லமை மிக்க கட்சியாக திகழும் என்று கூறினார். சுதந்திரத்திற்கு பிறகு முதல் 40 ஆண்டுகாலம் காங்கிரஸ் எப்படி வலுவடைந்ததோ அதேபோல் வலுவடையும் என்றும் பிரசாந்த் கிஷோர் பேட்டியளித்தார்.

பாஜக  தேர்தலில் வென்றாலும் சரி, தோற்றால் சரி இந்திய அரசியலில் சக்தி வாய்ந்த கட்சியாக பாஜக இருக்குமென்றும் பிரசாந்த் கிஷோர் கூறினார். மக்களிடையே பிரதமர் மோடிக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை அலசி ஆராய வேண்டும் என்றும் பிரசாத் கிஷோர் கூறினார்.

அப்போதுதான் மோடியை எதிர்கொள்வதற்கான திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறினார். மோடியின் செல்வாக்கு காலப்போக்கில் சரிந்துவிடும் என ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மாயையில் உள்ளன என்றும் பிரசாத் கிஷோர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment