Connect with us

பிஜேபிக்கு ஓட்டுப் போடலைன்னா வீடுகள் தரைமட்டமாக்கப்படும்! ஏற்கனவே முதலமைச்சர் ஜேசிபிகளை வாங்கியுள்ளார்!!: பாஜக எம்எல்ஏ

பாஜக

செய்திகள்

பிஜேபிக்கு ஓட்டுப் போடலைன்னா வீடுகள் தரைமட்டமாக்கப்படும்! ஏற்கனவே முதலமைச்சர் ஜேசிபிகளை வாங்கியுள்ளார்!!: பாஜக எம்எல்ஏ

பிஜேபிக்கு ஓட்டுப் போடலைன்னா வீடுகள் தரைமட்டமாக்கப்படும்! ஏற்கனவே முதலமைச்சர் ஜேசிபிகளை வாங்கியுள்ளார்!!: பாஜக எம்எல்ஏ

உத்தர பிரதேசத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 408 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அங்கு இதுவரை இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மொத்தம் அங்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜக அதிதீவிரமாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு உள்ள நிலையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் பேச்சால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

அதன்படி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காதவர்களின் வீடுகளை ஜேசிபி கொண்டு இடிப்போம் என்று அவர் கூறினார். யாரெல்லாம் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லையோ அவர்களின் வீடுகளை கண்டுபிடித்து ஜேசிபிக்கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்படும்  என்று அவர் கூறினார்.

இதற்கு டிஆர்எஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உபியில் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்படும் என்ற மிரட்டலுக்கு டிஆர்எஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானா பாஜக எம்எல்ஏ  ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் தாரக ராமாராவ். உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எதிரிகள் கூட பாஜகவுக்கு வாக்களித்துள்ளதாக பேசியுள்ளார் ராஜா.

ஆதித்யநாத் ஏராளமான ஜேசிபிகளை வாங்கியுள்ளார். பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களின் வீடுகள் தரைமட்டம் என்றும் ராஜா கூறினார். அதற்கு வாக்களித்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகள் தகர்க்கப்படும் என மிரட்டியுள்ளார் பாஜக எம்எல்ஏ.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top