மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறப்பு!!

தமிழகத்தில் தற்கொலை எண்ணங்கள் அதிகமாக உருவாகியுள்ளது. நாள்தோறும் தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதுவும் குறிப்பாக படிக்கின்ற மாணவ மாணவிகள் மத்தியில் தற்கொலை என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது .

இந்த நிலையில் சென்னை ஐஐடி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் போது கோர சம்பவம்நிகழ்ந்துள்ளது. அதன்படி சென்னை கிண்டியில் ஐஐடி படித்துக்கொண்டுள்ள மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இவர் இருபத்தியோரு வயது மதிக்கத்தக்க இளம் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாணவி செங்கல்பட்டு வரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரை காதலித்து வந்தனர். காதலின் நெருக்கத்தால் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் தான் கர்ப்பம் அடைந்தது வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என்று எண்ணி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பழைய காரன் குறுக்குத் தெருவில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தார்.

8 மாத கர்ப்பிணியான இவர் தற்கொலை செய்துகொண்ட போது கீழே விழுந்து மயக்கம் அடைந்த போது அதில் ஆண் குழந்தை உயிரிழந்தது. அக்கம்பக்கத்தினர் இவரை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து சென்னை வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment