பிக்பாஸ் அல்டிமேட்டை டிவில பார்க்க முடியாலன்னு ஃபீல் பண்றீங்களா? கவலையே வேண்டாம்; வந்துவிட்டது பிக்பாஸ் அல்டிமேட் சென்ற வாரம்!

பிக்பாஸ் ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது பிக்பாஸ் அல்டிமேட். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கூட நிறைவு பெறாத நிலையில் ஏராளமான ரசிகர்களை தன் பக்கமாக இழுத்துக்கொண்டது மிகப்பெரிய சாதனையாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் முந்தைய பிக்பாஸ் சீசன்களில் போட்டியிட்ட முக்கியமான சில போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். பிக்பாஸ் முந்தைய சீசன்கள் இல்லாமல் சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகிறது.

ஏனென்றால் இதனை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணையதளத்தில் 24 மணி நேரமும் கண்டு மகிழலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் பிக் பாஸுக்கு செல்போனை விட டிவி பார்க்கும் ரசிகர்கள்தான் ஏராளமாக உள்ளனர்.

அவர்களின் சோகத்தை போக்கும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் புதிய அறிவிப்பு ஒன்றினை கூறியுள்ளது. அதன்படி பிக்பாஸ் அல்டிமேட் சென்ற வாரம் என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

சென்ற வாரம் முழுவதும் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை தொகுப்பாக எடுத்து மூன்று மணி நேரம் பிக்பாஸ் அல்டிமேட் சென்ற வாரம் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இது பிப்ரவரி 6 ஞாயிற்றுக் கிழமை காலை 9:30  மணிக்கு தொடங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment