என்னது இது புதுசா இருக்கே? தேர்தல் களமாக மாறிய பிக்பாஸ்! அடுத்தடுத்து வாக்கு கேட்கும் போட்டியாளர்கள்!!

கோலாகலமாக கட்டிக் கொண்டு காணப்படுகிறது பிக் பாஸ் சீசன் 5. பிக் பாஸ் சீசன் 5 முடிவு பெற இன்னும் சில நாட்களே உள்ளது. இதில் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே இறுதி வாய்ப்புக்கு சென்றுள்ளதாக காணப்படுகிறது. அவர்கள் ராஜு, பிரியங்கா, நிரூப், அமீர் மற்றும் பாவணி ஆகிய ஐவர்.

இந்த சூழலில் இந்த வாரம் தொடக்கத்தில் முதல் நாளிலேயே பிக்பாஸ் தேர்தலை போல ஒரு டாஸ்க் வைத்துள்ளது. அது என்னவென்றால் கோல்டன் கலரில் மைக் ஒன்றை கொடுத்து உங்களுக்கு வாக்களிக்க மக்களிடம் நீங்கள் எவ்வாறு வேண்டுமானாலும் கூறலாம் என்று கூறியுள்ளது.

அதிலும் குறிப்பாக நீங்கள் கடைசி வாரத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள் என்றும் பிக்பாஸ் கூறியதாக சுற்றறிக்கையை பிக் பாஸ் போட்டியாளர் ராஜு லிவ்விங் ஏரியாவில் வாசித்தார்.

கோல்டு மைக் கண்டதும் பிரியங்காவிற்கு ஆனந்தம் பொங்கி வழிந்தது. அதோடு மட்டுமில்லாமல் பாவணி மற்றும் நிரூப் தங்களுக்கான வாக்கினை மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கான புரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது.

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/mJuG8gURsLM” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment