வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அலறி அடித்து ஓடிய பிக்பாஸ் நடிகை….!

தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக வலம் வந்தவர்கள் பலர் உள்ளனர். அதில் நடிகை பாத்திமா பாபு மிகவும் முக்கியமானவர். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய பாத்திமா பாபு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமாகி உள்ளார்.

பாத்திமா பாபு

முதன்முறையாக கடந்த 1996 ஆம் ஆண்டு கல்கி படம் மூலம் நடிகையாக அறிமுகமான பாத்திமா பாபு தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் ஏராளமான படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.

மேலும் பாத்திமா பாபு நிறைய சமூக சேவைகளையும் செய்து வருகிறார். அந்த வகையில் சென்னை ஐயப்பன் தாங்கல் பத்மாவதி நகரில் பாத்திமா பாபுவிற்கு சொந்தமாக உள்ள வீடு ஒன்றில் 20க்கும் மேற்பட்ட முதியவர்களை தங்கவைத்து முதியோர் இல்லம் போல நடத்தி வருகிறார்.

இந்நிலையில் திடீரென அந்த வீட்டிற்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை கண்ட முதியவர்கள் அலறி அடித்து கூச்சல் போட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் லாவகமாக பாம்பை பிடித்தனர்.

சுமார் ஆறடி நீளமுள்ள அந்த சாரை பாம்பை அவர்கள் வனப்பகுதியில் விடுவதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. மேலும் முதியவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததால் பாத்திமா பாபு நிம்மதி அடைந்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment