கூட்டு பிரார்த்தனையின் பலன்கள்

8ceabc36de4f7f982d5c4dc3c191589a

கடவுள் குறித்த சந்தேகங்கள் பல மனிதனுக்கு உண்டு. என்னதான் பிரார்த்தனை செய்தாலும் நம் கோரிக்கையை உடனே நிறைவேற்றவில்லையே என்ற வருத்தம் பலருக்கு உண்டு. நமது கோரிக்கைகளை நமக்கு வேலை வேண்டும், திருமணம், குழந்தை, பொன், பொருள் வேண்டுதல் என பலவற்றுக்கும் செய்யலாம். நமது கர்மவினைக்கேற்ப அது எப்போது வேண்டுமானாலும் நடக்கும். நாமும் பிரார்த்தனை செய்து விட்டு இன்னும் ஒன்றும் நடக்கலையே என நினைத்தாலும் நடக்கும்போது நடக்கட்டும் பார்த்துக்கலாம் என விட்டுவிடுவோம்.

ஆனால் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ உயிருக்கு போராடுகிறார் என்றாலோ நாம் மனதிற்குள் பிரார்த்தனை செய்து விட்டு நடக்கும்போது நடக்கட்டும் என்று விட்டு விட முடியாது இது போல நேரங்களில் கூட்டு பிரார்த்தனைதான் சிறந்தது. நாம் மனதில் எழும் அலைகள் இறைவனை நோக்கி சென்று நம் கோரிக்கைக்கு இறைவன் இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் நல்லது நடக்கிறது அல்லவா, ஆனால் கூட்டு பிரார்த்தனையின் சக்தி மகத்தானது நம்மை போல பலரின் எண்ண அலைகள் ஒன்று சேர்வதால் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஒருவர் உடல்நிலைக்காக கூட்டு பிரார்த்தனை மிகவும் அவசியமானது பலரும் சேர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்வதால் கடுமையான பிரச்சினையுடைய நோயாளி கூட உயிர்  பிழைப்பார்.

அதனால் ஒருவர் கடுமையாக உயிருக்கு போராடும்போது கூட்டு பிரார்த்தனை மிகவும் அவசியமானது. உங்களுக்கு தெரிந்தவர்களிடத்தில் அனைவரிடமும் சொல்லி பிரார்த்தனை செய்ய சொல்லலாம். பிரார்த்தனை க்ளப் என்று பெரிய நகரங்களில் இருக்கும். கோவில்களிலும் பக்தர்கள் இது போல பிரார்த்தனை குரூப்களை கிரியேட் செய்து வைத்திருப்பார்கள். அவர்கள் தினமும் தங்களிடத்தில் வரும் குறைகளுக்காக கூட்டு பிரார்த்தனை செய்வார்கள். ஒருவருக்கு கடுமையான பிரச்சினை என்றால் கூட்டு பிரார்த்தனையே சிறந்தது ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.