உக்ரைன்-ரஷ்யா இடையே இரண்டாம் கட்ட போர் தொடக்கம்..!:அதிபரின் தலைமை அதிகாரி
பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் புடின் மீது போர் புரிய உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையிலும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொண்டு வருகிறது.
இதனால் நேற்றைய தினத்தோடு உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிய தொடங்கி 50 நாளை நிறைவு பெற்றது என்பதும் குறிப்பிடதக்கது. இருப்பினும் இந்த போர் இன்றுவரையும் நிறைவடையாத நிலையில் காணப்படுகிறது.
இவ்வாறு உள்ள நிலையில் உக்ரைன்-ரஷ்யாவின் இரண்டாம் கட்டப் போர் தொடங்கி உள்ளதாக தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையிலான இரண்டாவது கட்ட போர் ஆரம்பமாகி உள்ளதாக உக்ரைன் அதிபர் zelensky’s தலைமை அதிகாரி andriy yermak தெரிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தலைமை அதிகாரி கூறினார். உக்ரைன் இராணுவத்தை நம்புமாறும், இராணுவ படையுடன் இருப்பதாகவும் ரஷ்யாவின் தாக்குதலை தடுத்து உக்ரைன் படை சமாளிக்கும் என்றும் அவர் கூறினார்.
கிழக்கு donetsk பகுதியில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
