Connect with us

விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்!! 76 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

Honeybees

தமிழகம்

விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்!! 76 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

திருப்பூர் மாவட்டம் கண்ணாடிபுத்தூர் பகுதியில் கோயில் தீர்த்தம் எடுக்க சென்றவர்களை தேனீ கொட்டியதால் 76 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் தேனீக்கள் மனிதர்களை கொட்டும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் கண்ணாடிபுத்தூர் பகுதியில் இருக்கும் கோயிலில் திருவிழா நடைப்பெற்றதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கோயில் பகுதியில் தீர்த்தம் எடுக்க சென்றவர்களை திடீரென விரட்டி விரட்டி தேனீக்கள் கொட்டியது. இதனால் சுமார் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 76 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் 8 பேர் மூச்சுத்திணறலால் அவதியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேனிக்கள் கொட்டியதில் காயம் அடைந்தவர்களை மடத்துக்குளம் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு செய்து நலம் விசாரித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top