தலைமை எடுத்த அதிரடி முடிவு….!! தற்காலிக சஸ்பெண்ட்; அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் எம்எல்ஏ!
2 நாட்கள் முன்பு நடைபெற்ற மறைமுக தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக வேட்பாளர்கள் பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். ஏனென்றால் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் திமுகவின் வேட்பாளர்கள் போட்டியிட்டு பல பகுதிகளில் வெற்றியும் பெற்றனர்.
இதனால் கூட்டணி கட்சிகளோடு திமுகவுக்கு முரண்பாடான கருத்துக்கள் நிலவியது. இதனை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை முடிவில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், ராஜினாமா செய்த பின்னர் என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள பல மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து கொண்டு வருகின்றனர். ஏனென்றால் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் கடலூர் திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர் திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது செயலாளர் அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சஸ்பெண்ட் செய்து பொது செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
