தற்போது நான்கு சக்கர வாகனங்களின் உற்பத்தியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்தப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது அதன்படி நான்கு சக்கர வாகனங்களில் கூடுதல் பம்பர் பொருத்தப்பட்டு விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்த மனுவையும் தள்ளுபடி செய்தது.
வாகனங்களில் கூடுதல் பம்பர் பொருத்துவதால் விபத்து நேரங்களில் ஏர் பேக் செயல்படாமல் போவதாகவும் புகார் எழுந்துள்ளது. பம்பர் பொருந்திய வாகனங்களால் எதிரே வரும் வாகனங்களுக்கு பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது கருத்தில் கொண்டு அதைத் தடை விதித்தது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசின் தடையை மீறி நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தபடுவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.
மேலும் சமூக ஆர்வலர் லெனின் என்பவர் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. மேலும் கார் உள்ளிட்ட வாகனங்களை உள்ளவர்களை உடனடியாக அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்கள், அதனால் பாதிப்பில்லை என வாதித்தனர்.
தயாரிப்பாளர்களின் வாதங்களை நிராகரித்து உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசு விதித்த தடை சரியே என தீர்ப்பளித்தது. ஒன்றிய அரசின் உத்தரவை தமிழ்நாடு அரசு கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிலிருந்து முக்கிய பிரமுகர்களுக்கு விதி விலக்கு அளிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.