டெல்லியை அடுத்து பஞ்சாப்பில் கால் பதிக்க முயற்சி! ஆட்டோ டிரைவர் வீட்டில் சாப்பிட்ட முதல்வர்!!

இந்தியாவில் மத்தியில் ஆட்சி செய்கிறது ஆம் ஆத்மி கட்சி. அதன்படி இந்தியாவின் தலை நகரமான டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

சட்டமன்ற தேர்தலுக்காக பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.ஏனென்றால் அடுத்த வருடம் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் புதுப்புது விதமான முறைகளில் மக்களை கவர்ந்து வருகின்றனர். அதன்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுனரின் வீட்டில் உணவு உட்கொண்டார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆட்டோவில் ஏறி பயணம் அங்குள்ள பகுதிகளுக்கு பயணம் செய்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.அதன் பின்னர் ஆட்டோ ஓட்டுனரின் வேண்டுகோள் ஏற்று அவரது வீட்டில் உணவருந்தினார். பின்னர் ஆட்டோ ஓட்டுனரிடம் நீங்கள் டெல்லிக்கு வந்தால் கட்டாயம் என் வீட்டில் உணவு உண்ண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment