Connect with us

இன்னும் சற்று நேரத்தில் பிரேத பரிசோதனை… கள்ளக்குறிச்சி மாணவி வீட்டு வாசலில் அதிகாரிகள் ஒட்டிய பரபரப்பு நோட்டீஸ்!

death 1 1

தமிழகம்

இன்னும் சற்று நேரத்தில் பிரேத பரிசோதனை… கள்ளக்குறிச்சி மாணவி வீட்டு வாசலில் அதிகாரிகள் ஒட்டிய பரபரப்பு நோட்டீஸ்!

மாணவி உடலின் மறு பிரேத பரிசோதனை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் என மாணவியின் வீட்டு வாசலில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி. சின்னசேலம் அருகே கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதனால் அவரது பெற்றோர் மறு பிரேத பரிசோதனை செய்வதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மறுபிரேத பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவிட்டார் .

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ஸ்ரீமதியின் உடலை மருத்துவக் குழுவினர் இன்று பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

இதனையடுத்து மாணவியின் உடல் இன்று பிற்பகல் 1 மணிக்கு பிரேதபரிசோதனை செய்யப்பட்ட உள்ளதாக, மாணவியின் சொந்த ஊரான பெரிய நசலூர் கிராமத்திலுள்ள வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

மாணவியின் பெற்றோர் இல்லாமலே உடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மாணவியின் பெற்றோர் மருத்துவமனை வந்தால் அனுமதிக்கலாம் என்றும்,
உச்சநீதிமன்றம் தடை வழங்காததால் மறு பிரேத பரிசோதனை நடைமுறையை தொடங்கெ உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top