ராணுவம் மன்னிப்புக் கேட்டது! வெறும் தற்காப்புக்காகவே துப்பாக்கி சூடு!:அமித்ஷா;

தற்போது நாகாலாந்து மாநிலத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவாகிறது. ஏனென்றால் அப்பாவி தொழிலாளர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்தனர். இதனால் நாகலாந்து மாநில அரசு மோன் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி உள்ளது.

மோன்

இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நாகலாந்து மாநில முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நாகாலாந்து மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.

அதன்படி நாகலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை நீதிமன்றத்தை நிறுவுகிறது இந்திய ராணுவம். தற்காப்புக்காகவும், கூட்டத்தை கலைக்கவும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்றும் ஒன்றியஅமைச்சர் அமித்ஷா விளக்கமளித்தார்.

நாகலாந்து மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக மன்னிப்பு கேட்டது ராணுவம் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறினார். துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இவ்வாறு விளக்கமளித்தார். நாகலாந்தில் இயல்பு நிலை திரும்ப உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமித்ஷா கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment