அமமுகவை அதிமுகவில் இணைக்க வேண்டும்! இல்லையென்றால் அதிமுக காணாமல் போய்விடும்!! சசிகலாவை இணைக்கலாமா?
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு அதிமுக கட்சியில் தலைமை தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அதிமுகவில் தற்போது இரண்டு தலைமை உள்ளது. அதன்படி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் அதிமுகவை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.
இந்த இரண்டு தலைமை என்பதால்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவில் பெரும் பின்னடைவை நிகழ்ந்ததாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற மற்றொரு கட்சியினை டிடிவி தினகரன் நிறுவியுள்ளது அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் குழப்பத்தை உருவாக்கி உள்ளது.
இந்த நிலையில் அமமுகவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று ஆறுகுட்டி கூறியுள்ளார். அதன்படி அமமுகவையும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் அனைவரும் சேராவிட்டால் அதிமுக காணாமல் போய்விடும் என்றும் ஆறுகுட்டி கூறியுள்ளார்.
இவ்வாறு உள்ள நிலையில் சசிகலாவின் பேச்சும் அதிமுக தலைமைக்கு பெரும் சல சலப்பை உண்டாக்குவதாக காணப்படுகிறது. சசிகலாவை தற்போது அதிமுக தொண்டர்கள் சின்னம்மா என்று அழைக்கிறார்கள்.
இந்த நிலையில் சசிகலா இணைப்பு குரல் எழுந்துள்ளதால் சேலத்தில் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சசிகலாவை இணைக்கும் குரல் எழுந்துள்ள நிலையில் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
