விளையாட்டு
“சிறந்த வீரர்களாக மாற்றுவதே இலட்சியம்”-பேட்மிட்டன் வீராங்கனை!
தற்பொழுது விளையாட்டுத் திருவிழா நிறைவு பெற்றதாக காணப்படுகிறது. ஏனென்றால் 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டில் நடைபெற்றது. இதில் ஏராளமான நாடுகள் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வெற்றி கொண்டன. மேலும் நம் இந்தியாவும் இந்த முறை மிகவும் சிறப்பாக விளையாடியதாக காணப்படுகிறது .மேலும் இந்தியா முதல் 50 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியா ஒரு தங்கம் உட்பட வெள்ளி வெண்கலப் பதக்கங்கள் இந்த முறை ஒலிம்பிக் நிறைவு செய்துள்ளது.
மேலும் இந்தியாவில் பேட்மிட்டன் போட்டியில் மிகவும் சிறந்தவர் என்று யாரிடம் கேட்டாலும் கூறுவர் அவர் சிந்து. மேலும் அவர் இந்த முறையும் ஒலிம்பிக்கில் பதக்கம் என்று உள்ளதாக காணப்படுகிறது. மேலும் கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஒலிம்பிக் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்று நாட்டிற்கு மிகவும் பெருமை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது தனது ஆசையும் லட்சியத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்தப்படி நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அதன் பின்னர் அவர்களை சிறந்த வீரர்களாக மாற்றுவதே தனது லட்சியமாக கூறியுள்ளார் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து.
