மதுரையை போன்று மற்றுமொரு மாநகரில் வருகிறது ‘எய்ம்ஸ்’?

நம் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளன. மேலும் இந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மற்றுமொரு இடத்தில் எய்ம்ஸ் அமைக்க கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அதன்படி கோவையில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

இன்னுயிர் காப்போம், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு செல்வதாக அமைச்சர் கூறினார் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

மேலும் ஆறு மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரி அமைக்க மன்சூக் மாண்டவியாவிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். உக்ரைன் நாட்டில் இருந்து வந்த தமிழக மாணவர்கள் வேறு இடத்தில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment