பிரபல பாடலாசிரியர் சினேகன் நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்யப்போகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். கமல்ஹாசன் தலைமையில் வரும் 29ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இந்த திருமணத்திற்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் தற்போது சினேகன் மற்றும் கன்னிகா ரவி இணைந்து எடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகை கன்னிகா, சமுத்திரகனி நடித்த ’அடுத்த சாட்டை’ என்ற திரைப்படத்தில் மாணவியாக நடிதுள்ளார் என்பதும், அதேபோல் தேவராட்டம், தாயின் மடியில், சத்ரபதி, உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு என்ற சீரியலில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை என்ற ஊரை சேர்ந்த கன்னிகாவுக்கு வயது 26 என்பதும் அவருக்கு டான்ஸ் மியூசிக் ஆகியவை பொழுதுபோக்குகள் என்றும் கூறப்படுகிறது.