சிவகார்த்திகேயன் நடித்த ‘மிஸ்டர் லோக்கல்’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் சன் டிவியில் ஒளிபரப்பான ’ரோஜா’ ’மின்னலே’ ’நாயகி’ ’திருமகள்’ உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நட்சத்திரா
இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதும் தெரிந்ததே
இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான டீசண்டான புகைப்படங்களை பதிவு செய்து தனது ரசிகர்களை கவர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தற்போது இவர் தனது காதலரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். நேற்று காதலரின் முதுகு பக்கம் உள்ள புகைப்படத்தை பதிவு செய்த அவர் இன்று அவரது மடியில் உட்கார்ந்து கட்டிப்பிடித்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
இவர்தான் தனது காதலர் என்றும் இவர் பெயர் ராஹா என்றும் நட்சத்திரா குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நட்சத்திராவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்