Connect with us

25 வது படத்திற்காக இரண்டு இளம் இயக்குனர்களிடம் கதை கேட்கும் நடிகர்..!

karthi 1

பொழுதுபோக்கு

25 வது படத்திற்காக இரண்டு இளம் இயக்குனர்களிடம் கதை கேட்கும் நடிகர்..!

25 வது படத்திற்காக இரண்டு இளம் இயக்குனர்களிடம் கதை கேட்கும் நடிகர்..!

சினிமாவில் நடிகர்களுக்கு அவர்களின் முதல் படம் எப்படியோ அதேபோல தான் அவர்களின் 25 மற்றும் 50 வது படமும். ஏனெனில் அவர்கள் கெரியரில் முக்கியமான படங்கள் என்பதால் இந்த படங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். அந்த வகையில் தற்போது ஒரு டாப் நடிகர் அவரின் 25வது படத்திற்காக இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.

அவர் வேறு யாருமல்ல பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் கெத்தாக என்ட்ரி கொடுத்த நடிகர் கார்த்தி தான். இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பையா, ஆயிரத்தில் ஒருவன் என தொடர் வெற்றி படங்களை வழங்கிய கார்த்தி நற் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கார்த்தி தற்போது கைவசம் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய படங்களை வைத்துள்ளார். இந்த படங்களையும் சேர்த்து இதுவரை கார்த்தி மொத்தமாக 23 படங்களில் நடித்துள்ளாராம். இந்நிலையில் இப்போதே தனது 24 வது படத்திற்காக கார்த்தி கதை கேட்க தொடங்கி விட்டாராம்.

அதன்படி இளம் இயக்குனர்களான அருண் ராஜா காமராஜா மற்றும் 8 தோட்டாக்கள் இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஆகியோரிடம் கார்த்தி கதை கேட்டுள்ளாராம். விரைவில் இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவரின் கதையை அவர் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக அவரின் 25 படத்திற்கு அதிகமாக மெனக்கெட்டு வருகிறாராம். ஏனெனில் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக கதையில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். மேலும் அந்த படம் ஏதாவது ஒரு பயோபிக் படமாகவோ அல்லது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படமாகவோ இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top