நடிகையின் அலறல் சத்தத்தை திரும்ப திரும்ப கேட்டு என்ஜாய் செய்த நடிகர்…. வெளியான பகீர் வாக்குமூலம்….!

கேரளாவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் என்றால் அது கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளாவில் பிரபல நடிகை ஒருவரை காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தான். இச்சம்பவம் திரையுலகில் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து வழக்கில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து தற்போது சுதந்திரமாக உள்ளார்.

இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து நடிகர் திலீப்பின் நண்பரும், பிரபல மலையாள இயக்குனருமான பால சந்திரகுமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில் கூறியிருந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவரின் கருத்துகள் அடிப்படையில் நடிகர் திலீப்பை மீண்டும் விசாரிக்க கேரள போலீசாருக்கு கொச்சி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனை தொடர்ந்து இயக்குனர் பாலசந்திரகுமாரிடமும் காவல்துறை உயர் அதிகாரிகள் கொச்சியில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது, “நடிகை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான போது பல்சர் சுனிலும் அவரது கூட்டாளிகளும் பதிவு செய்த வீடியோ காட்சிகளை நடிகர் திலீப் என்னிடம் காட்டினார். அதில் பதிவான சத்தம் மிகவும் குறைவாக இருந்தது.

இதனால் நடிகையின் அலறல் சத்தத்தை அதிகரிக்க, கொச்சியில் உள்ள ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்ததுடன், அங்கு அதிகரிக்கப்பட்ட நடிகையின் அலறல் சத்தத்தை நடிகர் திலீப் திரும்ப திரும்ப ரசித்து கேட்டார்” என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த வாக்குமூலம் திரையுலகில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வாக்குமூலம் காரணமாக நடிகை கடத்தல் வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த முறை நடிகர் திலீப்பிற்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment