Connect with us

வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார் எண்’ இணைக்கும் நடவடிக்கை..!!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்

செய்திகள்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார் எண்’ இணைக்கும் நடவடிக்கை..!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு சில முக்கிய அறிவிப்பினை கூறியுள்ளது. அதன்படி பான் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் பல இடங்களில் விரைந்து பான் கார்டு-ஆதார் எண் இணைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று திட்டவட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஒருவர் பெயர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை தடுக்க வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணைய ஆலோசனையின்படி தேர்தல் சட்டத்திருத்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் செயல்பாட்டிற்கு வருகின்றன. வாக்களிப்பதில் பாலின சமத்துவ உரிமை அளிக்க மனைவி என்ற சொல்லுக்கு பதில் துணைவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top