9 மணி நேர விசாரணை!! நேற்று, இன்று ஆஜரான பன்னீர்! விசாரணை நிறைவு பெற்றது….
நேற்று இன்று என இரண்டு நாட்களாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து கொண்டு வருகிறார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். ஏனென்றால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதில் நேற்றையதினம் பல்வேறு கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். நேற்று அவரிடம் எழுபதுக்கு மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இன்றைய தினமும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் நடத்த ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
இரண்டு நாட்களாக பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகம் ஆணையம் நடத்திய விசாரணை நிறைவடைந்து. இரண்டு நாட்களிலும் மொத்தம் 9 மணி நேரம் விசாரணை நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையில் இன்று சசிகலா, ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த ஒரு சதி திட்டம் தீட்ட வில்லை என்று ஓ பன்னீர்செல்வம் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
