73 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற முதியவர்… அதிலும் அவர் தேர்வு செய்த தலைப்பு தான் அல்டிமேட்…..

காதலுக்கு மட்டுமல்ல படிப்புக்கும் வயது ஒரு தடை இல்லை என்பதை பலர் நிரூபித்து வருகிறார்கள். தள்ளாத வயதிலும் பள்ளி படிப்பை நிறைவு செய்த முதியவர்கள் குறித்த பல செய்திகளை நாம் சமீபத்தில் படித்திருப்போம். தற்போதும் அப்படி ஒரு செய்தியை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

இன்றைய காலத்தில் படிப்பு என்றாலே குழந்தைகளுக்கு வேப்பங்காய் போல கசப்பாக உள்ளது. பள்ளி செல்ல வேண்டும் படிக்க வேண்டும் என்றால் ஏதோ மூட்டை தூக்கி கல் உடைக்கும் அளவிற்கு கடினமாக இருப்பதாக கூறுகிறார்கள். அதையும் தாண்டி சிலர் மட்டுமே படிப்பு முக்கியம் என்று கூறி படித்து வருகிறார்கள்.

இப்படி உள்ள சூழ்நிலையில் நெல்லையை சேர்ந்த 73 வயது முதியவர் பிஎச்டி படித்து பட்டம் பெற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் தங்கப்பன் என்பவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

எம்ஏ வரலாறு மற்றும் பிஎட் படிப்புகளை முடித்த தங்கப்பன் உயர்கல்வி மீதும் காந்தியக் கொள்கை மீதும் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 65 வயதில் நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தில் வரலாறு பாடத்தில் பிஎச்டி படிப்பை தொடர்ந்தார். இன்றைய பயங்கரவாத உலகத்திற்கு காந்திய தத்துவம் எவ்வாறு பொருத்தமாகும் என்ற தலைப்பில் எட்டு ஆண்டுகளாக தனது ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த தங்கப்பன் கடந்த 2018ஆம் ஆண்டு ஆய்வை முடித்தார்.

ஆனால் ஊரடங்கு காரணமாக அவருக்கு பிஎச்டி பட்டம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று மனோன்மணியம் பல்கலை கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் தங்கப்பன் தனது பிஎச்டி பட்டத்தை பெற்றார். 73 வயதில் பிஎச்டி பட்டம் பெற்றதைவிட காந்தி தத்துவத்தின் பயன்பாடு குறித்த தலைப்பை முதியவர் தங்கப்பன் தேர்வு செய்திருப்பது பாராட்டுக்குரியது என பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment