Connect with us

பத்து நாள் சித்திரை திருவிழா! இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்!!

Madurai Meenakshi Thirukalyanam 2020

Tamil Nadu

பத்து நாள் சித்திரை திருவிழா! இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்!!

பத்து நாள் சித்திரை திருவிழா! இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்!!

கடந்த இரண்டு ஆண்டுகளாக நம் தமிழகமெங்கும் சித்திரை திருவிழாவின்போது நடைபெறாமல் இருந்தது. ஏனென்றால் இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் தமிழக அரசு பல்வேறு விதமான திருவிழாவிற்கு தடை விதித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு நிலைமை அவ்வாறு இல்லை. இந்த ஆண்டு கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு விதமான கோவிலில் சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதுவும் குறிப்பாக இந்த மாதம் தொடங்கிய உடன் தஞ்சை பெரிய கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் இன்றைய தினம் சித்திரை திருவிழா கொடியேற்றம் நிகழ்ந்துள்ளது.

அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் ஏப்ரல் 16-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஆன்லைனில் டிக்கெட் பதிவு தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top