அது ஏன் என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட மொமண்ட்…. மாப்பிள்ளையை பார்த்து மணப்பெண் கேட்ட கேள்வி……

அந்த காலத்தில் திருமணம் நடந்ததற்கு சாட்சியாக ஒரு புகைப்படம் இருந்தாலே ஆச்சரியம் தான். ஆனால் தற்போது அப்படி அல்ல திருமணத்திற்கு முன்பு, திருமணம் நடக்கும்போது, நடந்த பின்னர் என அனைத்து நிகழ்வுகளையும் தத்ரூபமாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வருகிறார்கள்.

இதுதவிர போட்டோகிராபர்கள் தங்களை விளம்பரப்படுத்தும் விதமாக இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாக்களில் பதிவு செய்து வருகிறார்கள். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ வைரலாவதற்கு முக்கிய காரணம் மணமகனைப் பார்த்து மணமகள் கேட்ட ஒரு கேள்வி தான். அந்த வீடியோவில்
முகூர்த்த நேரத்தில், மண்டபத்தில் அமர்ந்திருக்கும் போது, மணமகனைப் பார்த்து மணமகள், “நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள்? ” என கேள்வி எழுப்பி உள்ளார்.

அது ஏன் என்ன பாத்து அப்படி கேட்ட என்பது போல் ரியாக்சன் கொடுத்த மணமகனோ அந்த கேள்விக்கு மிகவும் நகைச்சுவையாக பதில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “நான் நிம்மதியாக இருக்க விரும்பவில்லை” என கூறி முடித்த அடுத்த நொடி மண்டபத்தில் சிரிப்பலை எழுந்தது.

இந்த பதிலை சற்றும் எதிர்பாராத மணமகளின் ரியாக்சன் தான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், “அதே காரணத்துக்காகத் தான் நானும் திருமணம் செய்தேன்” என பலரும் வேடிக்கையாக அந்த வீடியோவிற்கு கீழே கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment