அனிதாவின் அந்த ஒரு மனசு-ரசிகர்களிடையே லைக்ஸ் எகிறியது! என்ன நடந்ததுன்னு பாருங்க!!
பிக்பாஸ் விட பிக்பாஸ் அல்டிமேட் அதி தீவிர சுவாரசியமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. ஏனென்றால் அங்கு பிக்பாஸ் ஓட்டு மொத்த சீசன்களில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்கள் தான் உள்ளனர்.
குறிப்பாக அனிதா, பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, வனிதா போன்ற சுவாரஸ்யத்தை அள்ளி கொடுக்கும் போட்டியாளர்கள் உள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் ஆரம்பித்த முதல் நாளே நாமினேசன் பிராசஸ் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் பட்டம் அளிக்கும் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்படுத்தியது. அதில் தொகுப்பாளராக பிரபல செய்தி தொகுப்பாளர் அனிதா தொகுத்து வழங்குகிறார். அதில் சர்ச்சை எனக்கு சட்டை மாதிரி என்ற ஐடி கார்டு போன்ற அவார்டை வனிதாவிற்கு அவர் வழங்கினார்.
வனிதா அதனை சந்தோசமாக ஏற்றுக் கொண்டார். அதே வேளையில் வீட்டில் சகுனி என்று கூறியவுடன் தாமாகவே சுரேஷ் சக்ரவர்த்தி முன்வந்து அந்த பட்டத்தை பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஷ பாட்டில் என்று அவர் வந்தவுடன் தாமரையை அழைத்து கார்டை கொடுத்தார். அதனை பார்த்த தாமரை எந்தப் பெயரும் இல்லை என்று அனிதாவிடம் கூற அனிதா மெல்ல தாமரையின் காதில் சென்று அது எனக்கு தான் என்று கூறினார்.
அந்த விஷ பாட்டில் பட்டத்தை அனிதா தானாகவே எடுத்துக்கொண்டது ரசிகர்களிடையே அவருக்கு பெருத்த ஆதரவை அள்ளிக் கொடுத்துள்ளது.
