அந்த ஒரு சிக்சர்! டெல்லியின் மொத்த நம்பிக்கையும் போனது!! பைனல் சென்ற கொல்கத்தா!!!

இன்றைய தினம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. அதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  ஆனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது.

டெல்லி கொல்கத்தா முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 135 ரன்களை மட்டுமே எட்டியிருந்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவன் 36 ரன்களை அடித்திருந்தார்.தவன்

136 ரன் அடித்தால் வெற்றி என்றும், பைனலில் சென்னையோடு மோத வேண்டும் என்ற வேகத்தோடு களமிறங்கிய கொல்கத்தா தனது ஆட்டத்தை ஆரம்பம் முதலே அதிரடியாக காட்டியது.

கொல்கத்தாமேலும் ஓபனிங் பேட்ஸ்மேன் சுமங் கில் மற்றும் வெங்கடேஸ் ஐயர் ஆட்டத்தை அதிரடியாக தொடக்கி வைத்தனர். மேலும் அதிகபட்சமாக கொல்கத்தா அணியில் வெங்கடேஸ் ஐயர் 54 ரன்கள் அடித்திருந்தார்.

மேலும் வெற்றி கொல்கத்தாவுக்கு என்ற நினைத்திருக்கும் நேரத்தில் திடீரென்று ஆட்டம் திசை திரும்பியது. ஏனென்றால் கொல்கத்தா அணியின் பல முன்னணி நட்சத்திரங்கள் தொடர்ந்து டக் அவுட் ஆனார்கள்.

குறிப்பாக கொல்கத்தா  அணியின் கேப்டன் இயான் மோர்கன் மற்றும் ஷகிப் அல் ஹசன், சுனில் நரேன் ஆகியோர் டக் அவுட் ஆனார்கள்.

இந்தநிலையில் வெற்றி டெல்லிக்கே பிரகாசமாக தோன்றிக் கொண்டிருந்த நிலையில் கடைசி ஓவரின் ஐந்தாம் பந்தில் ராகுல் திருப்பாதி சிக்ஸர் அடிக்க  கொல்கத்தா அணியானது பைனலில் நுழைந்தது.

சிஎஸ்கே கேகேஆர்இதனால் தற்போது கொல்கத்தா அணியானது பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மோத உள்ளது.

இந்த கொல்கத்தா அணியானது பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய இவ்விரு அணிகளையும்  பிளே ஆப் சுற்றில் சந்தித்து இவ்விரு அணிகளையும்  வென்று தற்போது பைனலுக்கு நுழைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment