அதிர்ச்சி..! பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி கவிழ்ந்தற்கு அந்த நாடு தான் காரணம் ..

அமெரிக்க ராணுவ முகாம்களை பாகிஸ்தானில் அனுமதிக்க மறுத்தே தான் பிரதமர் பதவியிலிருந்து விலக முக்கிய காரணம் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை பலத்தை இழந்ததால் அண்மையில் ஆட்சியை பறிகொடுத்த இம்ரான்கான் அரசு அமெரிக்கா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இம்ரான்கான் வெளியிட்டுள்ள வீடியோவில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய அமெரிக்கா பாகிஸ்தானில் ராணுவ முகாம்களை அமைத்து அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறியுள்ளார்.

இதற்கு தான் அனுமதி மறுத்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்திய போரில் சிக்கி பாகிஸ்தானில் 80 ஆயிரம் பேர் உயிரிழந்து இருப்பதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் நல்லுறவு மற்றும் ரஷ்யாவிடம் தான் மேற்கொண்ட பயணம் அமெரிக்காவைத் கோபமடைய செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். துரோகிகளை வீழ்த்தி புதிய பாகிஸ்தானை அமைக்க தொடர்ந்து பணியாற்றுவேன் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் 20ஆம் தேதி பாகிஸ்தானில் பிரம்மாண்ட பேரணி நடத்த முடிவு செய்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment