தரையில் அமர்ந்து பூஜை செய்பவரா நீங்கள்!? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்.

இறை நம்பிக்கை கொண்டோர் தனக்கு விருப்பமான கடவுளை நினைத்து தினமும் பூஜை செய்வது வாடிக்கை. அப்படி பூஜை செய்யும்போது நமக்கே தெரியாமல் சில தவறுகளை செய்துவிடுவோம். அப்படி தெரியாமல் செய்த தவறால் பூஜையின் பலன் கிடைக்காமல் போய்விடும். நமக்கே தெரியாமல் நாம் செய்யும் தவறுகளை பார்ப்போம். இனி அத்தவறு நேராமல் கவனமுடன் செயல்பட்டு பூஜையின் பலனை பெறுவோம்.

84406830a0f172006de865004bf4fc0f

பூஜை செய்யுமொபோது நாம் கீழே அமர்வதும், பூஜைக்குண்டான பொருட்களை தைரையில் வைப்பதும் தவறு. அவ்வாறு தரையில் பூஜை பொருட்களை வைத்தால் துரதிர்ஷ்டம் சேரும்.

சிவலிங்கத்தை வீட்டில் வைப்பதை தவிர்க்கலாம். அவ்வாறு வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் மரப்பலகைமீதே வைக்க வேண்டும். துணியின்மீதோ அல்லது தட்டுக்கள், தரையிலோ சிவலிங்கத்தை வைத்தல் கூடாது.

சங்கில் லட்சுமி குடியிருப்பதாக நம்பப்படுகிறது. சங்கினிஅயும் தரையில் வைக்கக்கூடாது. ஒரு பித்தளை தட்டில் அரிசி நிரப்பி அதன்மீதே சங்கினை வைக்கவேண்டும். சங்கினை தரையில் வைத்தால் பணப்பிரச்சனை வரும். வீட்டில் செல்வம் சேராது.

தினமும் காலை, மாலையில் பூஜையறையில் காமாட்சி அம்மன் விளக்கேற்றுவது வழக்கம். காமாட்சி அம்மன் விளக்கை தரையில் வைக்கக்கூடாது. செம்பு, பித்தளை தட்டிலோ அல்லது சுத்தமான துணியின்மீதோ வைத்து ஏற்றலாம். விளக்கு திரியிலிருந்து எதாவது நெருப்புப்பொறி பட்டு துணி கருகும் அபாயமுள்ளதால் துணியினை தவிர்ப்பது நலம்.

தங்கம் லட்சுமி தேவியின் அம்சம். தங்கத்தாலான பூஜைபொருட்களை தரையில் வைக்காமல் ஒரு தட்டில் வைத்தே பயன்படுத்தவேண்டும்.

மேற்கண்ட பொருட்களை தரையில் வைப்பதால் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழிலில் நஷ்டம் முதலிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் கவனம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.