Connect with us

தளபதி 66 ரிலீஸ் தேதி…தூள் பறக்க போகும் அந்த நாள் எதுன்னு தெரியுமா?…

thalapathy 66

Entertainment

தளபதி 66 ரிலீஸ் தேதி…தூள் பறக்க போகும் அந்த நாள் எதுன்னு தெரியுமா?…

தளபதி விஜய் நடித்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பீஸ்ட் படம் வசூலிலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்துவருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார்.படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கி இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது.

vijay66 title

இதற்கிடையே இப்படம் குடும்ப பின்னணியுடன் எமோஷனலாக உருவாக இருப்பதாகவும், விஜய்க்கு சகோதரராக பல படங்களில் நடித்த ஷ்யாம் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இப்படத்தில் சண்டை காட்சிகள் எதுவும் இருக்காது என தகவல்கள் கிடைத்துள்ளது .

தளபதி 66 படத்தின் டைட்டில்…அனல் பறக்கும் அப்டேட்!!..

விஜய்க்கு நடனம் எப்படியோ அதுபோல்தான் சண்டை காட்சிகளும் மாஸ் சீன்களும் அவரது ரசிகர்களுக்கும் விஜயிடம் பிடித்த ஒன்று . அந்த மாஸ் சீன்கள் எதுவும் இல்லாமல் ரசிகர்களிடம் இப்படம் எடுபடுமா என பலர் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர்.

thalapahy 66

அதன்படி தளபதி 66 படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரும் விஜய் பிறந்த நாளில் கண்டிப்பா வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் பிறந்தநாளில் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தால் கண்டிப்பா அது விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமையும்.

 

thalapathy pongal realese

தளபதி 66 படத்தின் ரிலீஸ் பற்றி முக்கியமான தகவல்களை படக்குழு இப்போது வெளியிட்டுள்ளது.அதன்படி தளபதி 66 படம் 2023 பொங்கல் பண்டிகை அன்று வெளியாகபோகிறது. இந்த பொங்கல் கண்டிப்பாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.தளபதி 66 படமாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று அவரது ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top