ரிலீசுக்கு முன்பே கல்லாகட்டிய தனுஷின் நானே வருவேன் ! அதுவும் கோடிக்காக?

செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணுவின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான நானே வருவேன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும், நானே வருவேன் இந்தப் படத்தின் மூலம் தனுஷ் தனது சகோதரர் செல்வராகவனுடன் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.தற்போது, இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

thanus nane

இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், செல்வராகவன், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

சமீபத்தில் இந்த படத்தின் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள முதல் ஆடியோ பாடல் வெளியிடப்பட்டது . இம்மாதம் 29ம் தேதி வெளியாகும் நானே வருவேன் படம் வெளியாகும் தயாரிப்பாளர் எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.

thanuss nanan

V- இல்லாமல் அஜித் பட டைட்டிலா? ‘ஏகே 61’ படத்தின் டைட்டில் குறித்து கசிந்த தகவல் !

இந்த படம் சென்சாருக்கு அனுப்ப அதில் படத்தை பார்த்த அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்திருப்பதாகவும், படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ. 25 கோடிக்கு அமேசான் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை ரூ. 18 கோடிக்கும் சன் டிவியும் வாங்கியுள்ளது.

இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை ரூ. 43 கோடி வரை விற்றுப்போயுள்ளது. ரூ. 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் ரிலீஸுக்கு முன்பே கிட்டத்தட்ட ரூ. 8 கோடி லாபமாக வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என சினிமா வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment