Connect with us

நானே வருவேன் திரைப்படத்தை பார்த்து ஆடிப்போன திரையுலகம்!

Dhanush lk

பொழுதுபோக்கு

நானே வருவேன் திரைப்படத்தை பார்த்து ஆடிப்போன திரையுலகம்!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பாலும் திறமையாலும் இன்று ஹாலிவுட் வரை சென்றுள்ளார் நடிகர் தனுஷ். அவர் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படங்களும் அவரது ரசிகர்களுக்கு விருந்தாகத்தான் அமையும்.

அந்த அளவிற்கு நடிகர் தனுஷ் கதைகளை தேர்வு செய்வதிலும், அதை சரியாக நடிப்பதிலும் வெளிப்படுத்தி வருகிறார். இந்தநிலையில் தற்போது இவர் நடிப்பில் நானே வருவேன் என்ற திரைப்படம் வெளிவர தயார் நிலையில் உள்ளது.

190437 thumb 665

இந்த திரைப்படத்தினை இவரது அண்ணனும் பிரபல இயக்குனருமான செல்வராகவன் இயக்கியுள்ளார். இந்த நானே வருவேன் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இயக்குநர் செல்வராகவனும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் முழு படமும் சில முக்கிய நபர்களுக்கு திரையிடப்பட்டு காட்டப்பட்டுள்ளது.

படத்தை பார்த்த அனைவரும் மிரண்டு போய் விட்டனர் என்று தகவல் கசிந்துள்ளது. ஒரு சிலர் செல்வராகவன் படத்தை இப்படித்தான் எதிர்பார்த்தோம் நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படி ஒரு படம் கிடைத்துள்ளது என வெகுவாக பாராட்டியுள்ளனர்.

197235 thumb 665

கையில் சிகரெட் உடன் இருக்கும் ராதிகா! வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top