
தமிழகம்
நலம் விசாரித்தவர்களுக்கு நன்றி!!-முதல்வர் ஸ்டாலின் உருக்கம்;
தமிழக முதல்வர்களிலேயே மிகவும் சுறுசுறுப்பாக மக்கள் பணியாற்றி கொண்டு வருபவர் தான் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றுக்கு ஆளானார். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவர் சற்று ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இருப்பினும் கூட தான் ஓய்வில் இருக்க விரும்பவில்லை என்பதனை கூறியுள்ளார். முதலில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைய விரும்பிய அனைவருக்கும் நன்றி என்று ஸ்டாலின் கூறினார்.
ஆயிரக்கணக்கானோர் என்னை தொடர்பு கொண்டு உடல் நலம் பெற வாழ்த்தினர் என்றும் கூறினார். வீட்டில் இருக்க சம்மதித்தாலும் ஓய்வில் இருந்திட மனம் ஒப்பவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணிகளை வீட்டில் இருந்தாலும் கவனித்தபடி தான் இருப்பேன் என்றும் கூறியுள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான முன்னேற்பாடுகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன் என்று ஸ்டாலின் கூறினார்.
