
News
கண்டனத்திற்கு மதிப்பளித்த முதல்வருக்கு நன்றி! அரசுக்கு பாராட்டு!!
கண்டனத்திற்கு மதிப்பளித்த முதல்வருக்கு நன்றி! அரசுக்கு பாராட்டு!!
சென்னை உயர்நீதிமன்றம் நாள்தோறும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும். இவ்வாறுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. முதலாவதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகரன் நேரில் அழைத்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு அளித்துள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிவாஜிகணேசனின் 94வது பிறந்தநாள் என்று இருபத்தி ஐந்து நிமிடங்கள் வாகனம் நிறுத்தப்பட்டு அதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார். நீதிபதியின் கண்டனத்தை தொடர்ந்து முதல்வரின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை 12 லிருந்து தற்போது 6 ஆக குறைக்கப்பட்டது.
உடனடியாக நடவடிக்கை எடுத்த தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்துறைச் செயலாளரின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார். அரசின் இத்தகைய நடவடிக்கை நீதிபதிக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
