
Entertainment
பால்கே விருது வாங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!!!
பால்கே விருது வாங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!!!
நேற்றைய தினம் டெல்லியில் தேசிய சினிமா விருது விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த பலருக்கும் விருதுகள் கிடைத்தது. குறிப்பாக நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படத்திற்கு பல விருதுகள் குவிந்தன.
பல வருடங்களுக்கு பின்பு பார்த்திபனுக்கும் விருது கிடைத்தது. இந்த நிலையில் தனது நடிப்பாலும், தனது திறமையாலும் இன்று மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்று உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக சினிமாவிலும் ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்துள்ளார். இத்தகைய ரஜினிகாந்திற்கு நேற்றையதினம் 67வது தேசிய சினிமா விருது விழாவில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இதுவே மிக உயரிய ஒரு தாகவும் காணப்படுகிறது. இதனால் இவருக்கு திரைத்துறையினர் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதன்படி தாதா சாகிப் பால்கே விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நெஞ்சார வாழ்த்திய அனைத்து துறை நண்பர்கள் ரசிகர்கள் மக்களுக்கும் இதயபூர்வமான நன்றி என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
