என்னை இங்கிலீஷ் பேச வைத்ததற்கு நன்றி: நடிகை குறித்து டுவிட் போட்ட சிவகார்த்திகேயன்!

daac674298483295353b931eb57f1833

படப்பிடிப்பு தளத்தில் என்ன இங்கிலீஷ் பேச வைத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என பிரபல நடிகை ஒருவரின் டுவீட்டுக்கு பதில் ட்வீட் போட்ட சிவகார்த்திகேயனின் டுவிட் தற்போது வைரலாகி வருகிறது

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் ரவிக்குமார் இயக்கி வரும் திரைப்படம் ’அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டது 

7aa77a866a92f98a02ec323ee7031908

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதாகவும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர்களுடன் பணிபுரிந்தது உற்சாகமாக இருந்தது என்றும் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தனது டுவிட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்தார் 

இந்த டுவிட்டுக்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், ‘உங்களுடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சி என்றும் குறிப்பாக என்னை படப்பிடிப்பு தளத்தில் இங்கிலீஷ் பேச வைத்ததற்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .சிவகார்த்திகேயனின் இந்த காமெடியை அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கும் என்றும் முதலில் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.