அவர் ஒரு சரித்திர நாயகனப்பா! நன்றி ஸ்டாலின்! மு.க.ஸ்டாலினை வாழ்த்திய கி.வீ!

நம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினால் சில தினங்களுக்கு முன்பு இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக முதல்வர் முக ஸ்டாலின் பள்ளி கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகிய இருவரையும் பாராட்டினார். வீரமணி

இந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தை குறித்தும் விளக்கம் அளித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின். இந்த நிலையில் அவரின் விளக்க அறிக்கைக்கு வரவேற்றுள்ளதாக திராவிட கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளார்.

அதன்படி இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறிய விளக்க அறிக்கைக்கு தான் வரவேற்று உள்ளதாக கூறியுள்ளார். ஊடுருவலுக்கு இடமில்லாமல் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெளிவுபடுத்தி இருக்கிறார் என்றும் கூறினார்.

இளம் பிஞ்சுகளின் பகுத்தறிவு வளர்ச்சியை ஊடுருவல் தாக்கும் அபாயம் ஏற்படும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்தோம் என்றும் அவர் கூறினார். முதலமைச்சரின் சீரிய விளக்கங்கள், சிறப்பான முறையில் வெளிவந்து மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கி.வீரமணி கூறினார்.

மாநில கல்வி அறிஞர்கள் குழு மூலம் பலவித ஊடுருவல்களுக்கு தடுப்பணை அமைக்கவும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கூறினார்.

ஊடுருவல்கள், விஷ உருண்டைக்கு சர்க்கரை பூச்சி போல் நிகழ்ந்து விடக்கூடாது என்பதே நமது கவலை என்றும் வீரமணி கூறினார். தெளிவுபடுத்திய சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்கு நன்றி என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அறிக்கை வெளியிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment