முதல்வருக்கு நன்றி; உங்கள் பாராட்டால் நெகிழ்ந்து நிற்கிறேன்:நடிகர் சூர்யா!

இன்று தினம் காலையில் நடிப்பின் நாயகன் சூர்யா, முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உதவி வழங்கினார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில் திரு முக ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.ஜெய் பீம்

ஏனென்றால் நாளைய தினம் நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் திரைப்படம் வெளியாக உள்ளது. இவை ஓடிடியில் வெளியாக உள்ளது. அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த ஜெய்பீம் திரைப்படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் சமூகப் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் திரைப்படமாக நாளைய தினம்  வெளிவர உள்ளது.

இதன் சிறப்பு கண்ணோட்டத்தைப் பார்த்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்க்கு நன்றி தெரிவித்தார். அதன்படி முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் பாராட்டு வார்த்தைகள் இன்று நெகிழ்ந்த நிற்கிறேன் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு ஜெய்பீம் படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி உள்ளது என்றும் நடிகர் சூர்யா கூறியுள்ளார். ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாக தமிழ் நாடு முதலமைச்சருக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment