
செய்திகள்
தஞ்சாவூர் தேர் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்!!
தஞ்சாவூர் தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் 13 பேர் படுகாயத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். அத்துன் படுகாயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கூறினார்.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தஞ்சாவூர் தேர் விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே உயிரிழந்த குடும்பத்தினருக்கு பிரதமர் நிதியில் இருந்து ரூ.2 லட்சமும் அதே போல் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் பிரதமர் நிதியில் இருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
