Connect with us

தங்க நகை வாங்கப்போறீங்களா?! அப்ப இதை படிங்க!

Special Articles

தங்க நகை வாங்கப்போறீங்களா?! அப்ப இதை படிங்க!

நகை வாங்கும்போது 5 அம்சங்களை கவனிக்கவேண்டும். அந்த ஐந்து அம்சங்கள் எவை என பார்க்கலாமா?!

ac2dbea8075afc2acd3833e96a4bc3ad

வாங்கும் நகைகள் ஹால்மார்க் முத்திரை பதித்ததா என்று பார்த்து வாங்க வேண்டும். ஹால்மார்க் என விளம்பரப் படுத்தப்பட்டாலும் பெரும்பாலான கடைகளில் அப்படி விற்கப்படுவதில்லை. ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகள்தான் தரமானவை. அதிலும் ஐந்து முத்திரை (முக்கோண சிம்பல், 916, டெஸ்ட் செய்த லேப், வருடம், கடை எண்) உள்ள ஹால்மார்க் நகைகளே தரமானவை. இதை பலரும் கவனிக்காமல் மூன்று முத்திரை கொண்ட ஹால்மார்க் நகைகளை வாங்கிவிடுகின்றனர். மேலும், வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும்.

b24815983062ebdd29abfb65a168414a

தங்க நகைகளை வாங்கும்போது கல் வைத்த நகைகளை வாங்கும்போது, அவை எத்தனை கிராம் உள்ளன, அதற்கான விலை எவ்வளவு, மொத்த விலையில் கற்கள் போக தங்கத்தின் விலை சரியாக உள்ளதா?! என்று பார்த்து வாங்குங்கள். பிற்காலத்தில் அந்த நகைகளை தந்து புது நகை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ கல் நகைகளுக்கு மதிப்பு குறைத்தே கணக்கிடப்படும். ஆகவே, கல் நகைகளை வாங்கும்போது கவனத்தோடு இருக்கவேண்டியது அவசியம்.
சிலர் நகை வாங்கவேண்டும் என்றதுமே நல்ல டிசைனாக இருக்க வேண்டும் என்று நினைக்க தொடங்கிவிடுவார்கள். அப்படி டிசைன் நகைகளை வாங்கும்போது அதற்கு சேதாரம் அதிகமாகும், அப்போது அதற்கான சேதாரம் எவ்வளவு, அது நகையின் டிசைனுக்கு தகுந்த சேதாரம்தானா என்று பார்த்து அதற்குபின் வாங்குங்கள். பார்க்க நன்றாக உள்ளது என நீங்கள் வாங்கும் சிறிய அளவிலான நகைகளின் ஆயுள் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். மேலும், நீங்கள் ஏதாவது ஒரு நகையை அட்சயதிருதியை அன்று வாங்க வேண்டுமே என்ற காரணத்துக்காக 2 கிராமுக்கு கீழ் நகை வாங்கும்போது தரம் குறைந்த நகைகளை வாங்கும் வாய்ப்பு அதிகம். அதனால், நகை வாங்கும்போது இரண்டு கிராமுக்கு மேல் உள்ள நகையாகப் பார்த்து வாங்குவது நல்லது.

நகைகள் வாங்கும்போதும் அதற்கு என்ன தரக் குறியீடு எனப் பார்த்து வாங்க வேண்டும். தங்கம் என்றால் 916 நகைகள், வைர நகைகள் வாங்கும்போது தரச் சான்றிதழ் பார்த்து வாங்கவேண்டும். குறிப்பாக, வைரம் வாங்கும்போது கட்டாயம் தரச் சான்றிதழை கேட்டு பெற வேண்டும்.

சேதாரம் என்கிற விஷயம் கடைக்கு கடை மாறுபடும். நீங்கள் எந்த நகை வாங்குவதாக இருந்தாலும் சேதாரம் எவ்வளவு என்பதை நன்கு விசாரித்து அறிந்தபிறகே வாங்குங்கள். இதில் குழப்பமான பல கணக்குகள் இருப்பதால், உஷாராக இருப்பது அவசியம்! டெம்பிள் டிசைன் , ஆண்டிக் ஜுவல்லரி மாதிரியான நகைகளுக்கு சேதாரம் அதிகம் பிடிக்கும் பழைய மாடல் நகைகளுக்கு சேதாரம் குறைவாகவே இருக்கும். இதையும் நினைவில் கொள்ள வேண்டும்,

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Special Articles

 • 146891 146891

  Special Articles

  பேரறிவாளன் வழக்கு பயணித்த முழு பாதை!!…

  By

  1992ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இரவு பத்து இருபது மணிக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித...

 • c9451dbfda167a6c045322ecee7d8937 c9451dbfda167a6c045322ecee7d8937

  Special Articles

  முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வேண்டுமா? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?- எளிய வழிமுறைகள்!

  By

  முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்? மொத்தம் ஜந்து நிலைதான் நீங்கள் விண்ணப்பிக்க…...

 • 70494407 70494407

  Special Articles

  நலங்கு மாவு செய்வது எப்படி? மற்றும் அதன் பயன்கள்..! முழு விபரம்…

  By

  பொதுவாக முகத்திற்கு அதிகம் செயற்கை பொருட்களை பயன்படுத்துதல், காற்று மாசு, துரித உணவு அதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது....

 • kuttys kuttys

  Special Articles

  தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து நமக்கு தெரியாத பல உண்மைகள் !!

  By

  தாய்ப்பாலின் மகத்துவம்   தாய்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்ப்பால் ஏனென்றால் இந்த உலகில் அந்த தாய்ப்பாலுக்கு சரிசமான ஒன்று எதுவுமில்லை பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும், பெரும்காரணமாக இருப்பது தாய்ப்பால் ஒன்றே   உலகத்தாய்ப்பால் ஊட்டும் வாரத்தை ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டமானது உலகெங்கும் 170க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் நடைபெறுகிறது.   தாய்ப்பாலின் சத்துக்கள்:   குழந்தை பிரசவமானவுடன் முதல் நாளான்று உருவாகும் சீம்பால் அடர்த்தியான சத்துக்களை கொண்டது அது மட்டுமல்ல பாக்டீரியா வைரஸ் போன்ற கிருமிகளில் இருந்து தாக்குதலை எதிர்கொள்கிறது.   தாய்ப்பால் புகட்டுவதால் சேய்க்கு மட்டும் பயன் கிடைப்பதில்லை அது தாய்க்கும் நல்ல பயன் தருகிறது, தாயின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் தாக்கத்திலிருந்தும் காக்கப்படுகிறது   குழந்தைகளுக்கு கட்டாயம் 6- மாதங்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவேண்டும் அதற்கு பிறகு தான் பிற உணவுகள் சேர்த்து வழங்கப்பட வேண்டும் அதிலும் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது.   இது குழந்தைகளின் சிறுவயதில் ஏற்படக்கூடிய நோய்கள் மட்டுமல்ல பிற்காலத்தில் வரக்கூடிய நோய்களிலிருந்தும் தடுக்கும் ஆற்றல் இதற்கு இருக்கிறது. சத்து மிகுந்த தாய்ப்பாலில் உள்ள என்ûஸம்கள்; மற்றும் நோய் எதிர்ப்புச்சத்துக்கள் ஆகியவை குழந்தைகளது மென்மையான உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்து பரிபூரண வளர்ச்சியை அளிக்கும் ;  ...

 • images 2 images 2

  Special Articles

  கச்சதீவு குத்தகைக்கு விட போறீங்களா !! முழு தகவல் இதோ ..

  By

  இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில்...

To Top