தமிழ் புத்தாண்டு உருவாக நாரதரா காரணம்?!


65640fb1bd64ccf0113f0660e60349ac

 நாரதர் கலகம் நன்மையில் முடியும்ன்னு சொல்வார்கள்.  ஆனா இங்கு நாரதர் கலகம் தமிழுக்கு 60 வருடங்களை கொடுத்து இருக்கு. பிரம்மதேவனுக்கும், நாரத முனிவருக்கும் ஒரு வாதம் தொடங்குகிறது இந்த பூவுலகில் மாயையை கடந்தவர் யாரும் இல்லை. ஏனெனில்,  இங்கே எல்லாமே மாயைக்கு கட்டுப்பட்டது இருப்பதுபோல் இருக்கும். ஆனால் எதுவும் நிலை இல்லாதது என வாதம் செய்கிறார் அதற்கு நாரதமுனி இல்லை, தான் விஷ்ணுவின் பக்தனானதால், தன்னை விஷ்ணு மாயா தீண்டாது’ என்று நாரதர் வாதம் செய்கிறார். வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்து இல்லை இதை உணர்த்த எண்ணிய பிரம்மதேவன் அந்த நாராயணனிடமே முறையிடுகிறார்.

மகாவிஷ்ணுவும் பிரம்மதேவனின் கோரிக்கையை ஏற்று நாரதருக்கு மாயையை உணர்த்த உறுதியளிக்கிறார் அதன்படி நாரதர் பூவுலகில் சஞ்சரிக்கையில் சர்பபுரி என்னும் இடத்தில் உள்ள குளத்தில் குளிக்கும்படியான சூழ்நிலையை உருவாக்குகிறார் விஷ்ணு பகவான் நாரதரும் அந்த குளத்தில் குளித்தவுடன், மாயையில் ஆட்பட்டு பெண்ணாக உருமாறி விடுகிறார். அபொழுது அந்த வழியாக வந்த அரசகுமாரன் பெண்ணாக மாறிய நாரதமுனிவரை கண்டு மையல் கொள்கிறான் தன்மேல் மையல் கொண்ட அரசகுமாரனை மணம்புரிந்து கொள்கிறார். அவர்களுக்கு பிரபவ முதலான அறுபது குழந்தைகள் பிறக்கின்றன. அப்படி இருக்கும் போது ராஜ்ஜியங்களுகிடையில் போர் வருகிறது அப்போரில், அரசகுமாரனும், அந்த அறுபது குழந்தைகளும் கொல்லபடுகின்றனர். அதனால் சோகம் உற்ற நாரதர், மகாவிஷ்ணுவை வேண்டுகிறார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்து, மீண்டும் ஒரு குளத்தில் முழுகி எழச் சொல்கிறார். நாரதர் அப்படி எழுந்தவுடன், பழையபடியே நாரதராக மாறி, தான் அத்தனை வருடங்களும் மாயையில் இருந்ததை உணர்கிறார்.

இந்த கதை நடந்தாக சொல்லப்படும் இடம், ஆந்திர மாநிலம் காகிநாடா அருகில் உள்ள சர்பபுரம் என்னும் ஊராகும். இங்கு நாரத குண்டம், முக்தி குண்டம்னும் சொல்லபடுகிற இரு குளங்கள் இருக்கின்றது. இங்கு அருள்பாலிக்கும்  இறைவன் பெயர் “பாவநாராயணன்’. வாழ்க்கை ஒரு பாவனை என்று காட்டுவதே இதன் தத்துவம் இந்த பாவனையை உண்மை என்று எண்ணி நாம் அதில் ஒன்றி விடுகிறோம். இப்படியே வாழ்நாளைக் கழிக்கிறோம்.அறுபது வருடங்கள் என்பது ஒரு சுற்று என கணக்கிடப்பட்டு அதனால்தான் 60 வயது முடிந்தவுடன் ஆயுள் விருத்திக்காக 60-ம் கல்யாணம் நடத்தபடுகிறது இந்தக் கதையில் நாம கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் பிரபவ, விபவ என்று பெயர் சூட்டப்பட்ட அறுபது வருசக் குழந்தைகளும் இறந்து விடுகின்றன. இதில்தான் இந்தக் கதையின் தத்துவமே புதைந்து இருக்கு இந்த 60 வருடங்களின் பெயர்கள் எல்லாம் அலங்காரத்திற்காக வைக்கப்பட்ட பெயர்கள் அல்ல. அறுபது விதமாக, நல்லதும் தீயதும் நடக்கும் வாழ்க்கை ஒருநாள் முடிந்துவிடும்.இந்த அறுபது வருடங்களும் எதைச் சாதித்தோம், எதை செய்தோம், எதற்காகத்தான் வாழ்ந்தோம் என்பது தெரியாமல் இருக்கிறோம்.அதுதான் மாயை.மாயையிலிருந்து விடுபட இறைவனைத் தொழுது வெளிவர வேண்டும்- நாரதரைப் போல என்பதே இதன் கருத்து.

நாமும் காதல், காமம், குரோதம், பழி, கோபம் என்ற மாயையிலிருந்து விடுபட்டு நலமோடு வாழ்வோம்,

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.