தமிழ் புத்தாண்டில் நாம் செய்ய வேண்டியது இதுதான்..

சித்திரை மாதம் பிறப்பைதான் தமிழ் புத்தாண்டின் தொடக்கமாக தமிழகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நாளை தமிழர்கள் மட்டுமல்ல கேரள மக்கள் விஷுக்கனி காணுதல் என்றும், வங்காளத்தில் நாபா பர்ஷா என்றும், அசாமில் ரொங்காலில் பிஷு என்றும், சீக்கியர்கள் முதலான வடஇந்தியர்கள்  பைசாகி என்றும் இந்நாளை கொண்டாடுகின்றனர்.  

இந்தியா விவசாய நாடு. அதனால், விவசாயிகள் மகிழ்ந்திருப்பது அறுவடை காலத்தில். அறுவடை தைமாதத்தில் வருவதாலும்,   தமிழ் மாதப்பெயர்கள் ஒன்றாவது தமிழில் உள்ளதா?! அதனால் தைமாதம்தான்   தமிழ் வருடப்பிறப்பு என ஒரு சாராரும்  இல்லை  இந்தியா வெப்ப நாடு. சூரியன் நிற்கும் நிலையை கொண்டு இளவேனில் காலம், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என  வருடத்தின் பருவக்காலம் பிரிக்கப்படுது.  சித்திரையில் இளவேனில் காலம் ஆரம்பிப்பதால்  சித்திரை முதல்நாள்தான் தமிழ்வருடத்தின் முதல்நாள் என மற்றொரு சாராரும் வாதாடுகின்றனர்.

ஜோதிடரீதியாக  மேஷம் தொடங்கி மீனம் முடிய பனிரெண்டு ராசிக்குள் சூரியன் குடியிருக்கும் நாட்கள் ஒரு மாதமாகும்.  சூரியன் மேஷராசியில் குடியிருக்கும் மாதம் சித்திரை. சித்திரை தொடங்கி பங்குனி முடிய தமிழ்மாதங்கள்  பனிரெண்டை கொண்டதுதான் தமிழ் வருடம். எனவே, சித்திரை முதல் நாளே தமிழ் வருடப்பிறப்பு எனவும் சொல்லப்படுது. சித்திரையில்தான் சூரியன் உச்சம் பெறுகிறார். ஒரு தினம் 60 நாழிகை கொண்டது என்றும் கணக்கிட்டனர். ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள். இன்றைய 24 மணிநேரம் கொண்ட ஒருநாள் இந்த கணக்குக்கு சரியாகப் பொருந்துகிறது. தமிழில் நாட்களுக்கு ஞாயிறு என்று சூரியனின் பெயரும் கிரகங்களின் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. வானியல் சோதிட நூலான சூரிய சித்தாந்தம் எனும் சமஸ்கிருத நூலில் நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையின் காலமாக 60 வருடங்கள் கணிக்கப்பட்டுள்ளன.

சித்திரை முதல்நாளில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் கொண்டாடப்படுது. அன்றைய தினம்  தங்கள் வீட்டை சுத்தப்படுத்தி மாவிலை தோரணம் கட்டி, காவி வரைந்து பூஜைஅறையில் விளக்கேற்றி பச்சரிசி பரப்பி அதன்மேல் மனையிட்டு புதுவருட பஞ்சாங்கம்  வைத்து வெற்றிலை,பாக்கு, பழம் வைத்து சர்க்கரைப்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடவேண்டும்.

ஒவ்வொரு நாளும் பஞ்சாங்கம் படித்தல் நலம். இன்றைய காலகட்டத்தில் இது இயலாத காரியம். அதனால் தமிழ் வருடப்பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படித்தாலோ அல்லது பஞ்சாங்கம் படித்தலை கேட்பதோ நல்லது. பஞ்சாங்கம் என்பது யோகம், திதி, கரணம், வாரம், நட்சத்திரம் என முக்கிய ஐந்து அம்சங்களை முக்கியமாய் கொண்டது. பஞ்சாங்கம் படித்தலை கேட்கும்போது  யோகம் ரோகத்தை போக்கும். திதி நன்மையை அதிகரிக்கும், கரணம் வெற்றியை தரும். வாரம் ஆயுளை தரும். நட்சத்திரம்  பாவத்தை போக்கும். முன்பெல்லாம் அனைத்து வீடுகளிலும் தமிழ் வருடப்பிறப்பன்று வீட்டில் பஞ்சாங்கத்தினை படைத்து, பின்பு பஞ்சாங்கத்தை பார்த்து நல்லது கெட்டது, மழை, வெயில் பற்றி வீட்டின் மூத்தவர் படித்து காட்டுவார்கள். ஊர் பஞ்சாயத்து, கோவில்களிலும் பஞ்சாங்கம் நடைமுறையில் இருந்தது. காலப்போக்கில் இந்த பழக்கம் வழக்கொழிந்து போனது..

தமிழ் புத்தாண்டு அன்று தமிழர்கள்  தங்கள் வீடுகளில் வேப்பம்பூ, மாங்காய், மிளகா, உப்பு, புளி, வெல்லத்தால் பச்சடியை செய்வர். இதன்மூலம்  இன்பம், துன்பம் போன்றவை நிறைந்ததுதான் வாழ்க்கை என உணர்த்தினர்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.