தாமரையை காப்பாற்ற முயற்சிக்கும் அபிஷேக்: உன்னை முதலில் காப்பாத்திக்கோ நெட்டிசன்கள் கிண்டல்!

தாமரையை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற முயற்சிக்கும் அபிஷேக்கை உன்னை முதலில் காப்பாற்றிக் கொள் என நெட்டிசன்கள் கிண்டலடித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இன்றைய டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும், ஒருவேளை அவர் நாமினேஷனில் இல்லை என்றால் நாமினேட் செய்யப்பட்ட இன்னொருவரை அவர் காப்பாற்றலாம் என்றும் அறிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தாமரையை காப்பாற்றுவதற்காக அபிஷேக் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் சக போட்டியாளர்களும் அதற்கு ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிகிறது. மேலும் தாமரை அபிஷேக்கின் காலில் விழுந்து கதறி அழும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தாமரையை நாங்கள் காப்பாற்றுவோம், உன்னை நீ முதலில் காப்பாற்றி கொள் என அபிஷேக்குக்கு நெட்டிசன்கள் கிண்டலடித்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நூலிழையில் தப்பிய அபிஷேக்கை இந்த வாரம் வெளியேற்றியே தீருவோம் என நெட்டிசன்கள் கூறிவருவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment