விலைமதிப்பில்லா காயினை பறிகொடுத்த தாமரை: கதறி அழுததால் பரபரப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பஞ்சதந்திரம் என்று டாஸ்க் வைக்கப்பட்டது என்பதும் இந்த டாஸ்க்கில் கொடுக்கப்பட்டிருந்த 5 காயின்களை வருண், இசைவாணி, அபினய், தாமரைச்செல்வி மற்றும் பவானி ரெட்டி ஆகியோர் கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விலைமதிப்பில்லாத இந்த காயினை வைத்து நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டவரை நீக்கிவிட்டு நாமே கேப்டனாக தேர்வு செய்துகொள்ளலாம் போன்ற பவர் இந்த காயினுக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த காயினை வைத்திருந்த தாமரை இன்று காயினை பறிகொடுத்து விட்டார். அவரது காயினை ஸ்ருதி எடுத்து விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து சுருதி மற்றும் தாமரை இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது என்பதும் வாக்குவாதத்தின் முடிவில் தாமரை கதறி அழும் காட்சி இன்றைய முதல் புரமோவில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காயினை கைப்பற்றினால் மட்டும் போதாது அந்த காயினை பயன்படுத்தும் வரை அதனை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என பிக்பாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment