தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 65’ இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் வரும் 22ஆம் தேதி தளபதி விஜய்யின் 47வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து அன்றைய தினம் தளபதி 65 திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக தளபதி 65 திரைப்படத்தின் டைட்டில் ’டார்கெட்’ என்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் பஸ்ட் லுக் போஸ்டரில் ’டார்கெட்’ டைட்டில் தானா என்பதை தெரிந்து கொள்ளலாம்
விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் அவர் நடித்த மலையாள நடிகை அபர்ணா தாஸ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் யோகிபாபு விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்