23 ஆண்டுகளை கடந்த தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படம்… நினைவுகளை பகிர்ந்த பிரபல நடிகை….!

கோலிவுட்டில் உச்ச நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது மட்டுமல்ல ஆரம்ப காலம் முதலே தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த சமயத்தில் இவர் நடிப்பில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

thulatha manamum thulum

அந்த வரிசையில் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது துள்ளாத மனமும் துள்ளும் படம் தான். இயக்குனர் எழில் இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 12 கோடி வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 4 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்பி செளத்ரி தயாரிப்பில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருப்பார். இவர்கள் தவிர மணிவண்ணன், தாமு, வையாபுரி ஆகியோர் உடன் நடித்திருப்பார்கள். படத்தில் காமெடி மட்டுமல்லாமல் எஸ்ஏ ராஜ்குமார் இசையில் பாடல்கள் பயங்கர ஹிட்டானது. அந்த சமயத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அவ்வளவு பிரபலமாகும்.

இந்த படத்தில் விஜய்க்கு இணையாக சிம்ரன் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். பார்வையற்ற பெண்ணாகவும் சரி பார்வை கிடைத்ததும் தைரியமான கலெக்டராக இருக்கும்போதும் சரி சிம்ரனின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படம் வெளியாகி இன்றுடன் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளை கடந்து விட்டது.

இதை நினைவுகூறும் விதமாக நடிகை சிம்ரன் அவரின் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னால் மறக்க முடியாத சிறந்த படங்களில் ஒன்றான துள்ளாத மனமும் துள்ளும் படம் இன்று 23வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என குறிப்பிட்டு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment