இன்னும் 15 நாட்கள் தான்… சத்தமே இல்லாமல் விஜய் செய்து வரும் தரமான சம்பவம்!
தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள பீஸ்ட் பட வெளியீடு தொடர்பாக லேட்டஸ்ட் அப்டேட் கசிந்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவருடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிடுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் தீயாய் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பிப்ரவரி 14ம் தேதி அன்று காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக ‘அரபிக்குத்து’ பாடல் வெளியானது, இந்த பாடல் வெளியான நிமிடத்தில் இருந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
அரேபிய குத்து படல் வெளியாகி 20 நாட்கள் ஆன நிலையில் இதுவரை யூ-டியூப்பில் 125 மில்லியன் பார்வைகளை கடந்து தொடர்ந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 20-ம் தேதி சென்னையில் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்ட நிலையில், பீஸ்ட் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
