மாஸ்டர் திரைப்படம் சினிமாவுக்கே கிடைத்த பரிசு! டாப் 10 பட்டியலில் தளபதி விஜய்!!

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த கொண்டுள்ளவர் நடிகர் விஜய். இவர் பற்றி தற்போது மிக சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவர் டுவிட்டரில் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Twitter 1 1

2021 ஆம் ஆண்டு இன்னும் 21 நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டு முழுவதும் அதிக முறை பயன்படுத்த பட்ட ஹேஸ்டேக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதலிடத்தினை கொரோனா பிடித்துள்ளது.

அதனை தொடர்ந்து ஐபிஎல், டோக்கியோ ஒலிம்பிக், இந்தியா-இங்கிலாந்து,இடையே போட்டி, என வரிசையாக இடத்தை பிடித்துள்ளன.

இந்த டாப் 10 பட்டியலில் சினிமா துறையை சேர்ந்த மாஸ்டர் திரைப்படம் ஒன்று மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி டாப் டென் ஹேஸ்டேக்குகளில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் எட்டாவது இடத்தை பெற்றுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். அதோடு நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படமான பீஸ்ட் அதிகமுறை ரீ-டுவிட் செய்ததாகவும் காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment