பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் ஷாருக்கான். நீண்ட இடைவேலைக்கு பிறகு ஷாருக்கான் – தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பதான்.
இந்த படம் தொடங்கிய நாள் முதலில் இருந்தே தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதன் படி, காவி நிற நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக தீபிகா படுகோன் நடனம் ஆடியதற்கு பலரும் தங்களுடைய கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
துணிவு, வாரிசு படங்களை இணையத்தில் வெளியிட தடை: ஐகோர்ட் உத்தரவு!
அதே சமயம் பாடலின் காவி உடை மற்றும் வரிகளை நீக்க வேண்டும் எனவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் பாதான் படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார்.
அதில் இந்தியாவிற்கு எதிராக தனியார் பயங்கரவாதக் குழுவினர் செயல்படுவது போன்றும் இவர்களை தடுக்க ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் எதிர்த்து போராடுவது போன்று அமைந்துள்ளது.
முன்னாள் முதல்வருடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு: பின்னணி என்ன?
இதனை பார்க்கும் போது கட்டாயமாக தேச பக்தி படம் என்பதை நம்மால் காண முடிகிறது. வருகின்ற ஜனவரி 25-ம் தேதி உலகமெங்கும் அனைத்து திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.